ADDED : ஆக 17, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில், ‘ஹோப் பார் கிரிட்டர்ஸ்’ எனும் விலங்கு நல அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறியதாவது:
பள்ளிக்கரணை காமக்கோட்டி நகரில், தெருநாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் கருத்தடை செய்யப்படும் நாய்களை, பராமரிப்பு காலம் முடிந்த பின்பும் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளனர். அவற்றை, பிடித்த இடங்களிலே மீண்டும் விடவேண்டும்.
இவ்வாறு விலங்கு நல அமைப்பினர் கூறினர்.
பள்ளக்கரணை போலீசார் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
