/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலூர் பூங்காவில் விலங்குகள் மாயம்... தொடர்கதை!:காட்டு மாடு தப்பியதால் ஊழியர்கள் அச்சம்
/
வண்டலூர் பூங்காவில் விலங்குகள் மாயம்... தொடர்கதை!:காட்டு மாடு தப்பியதால் ஊழியர்கள் அச்சம்
வண்டலூர் பூங்காவில் விலங்குகள் மாயம்... தொடர்கதை!:காட்டு மாடு தப்பியதால் ஊழியர்கள் அச்சம்
வண்டலூர் பூங்காவில் விலங்குகள் மாயம்... தொடர்கதை!:காட்டு மாடு தப்பியதால் ஊழியர்கள் அச்சம்
ADDED : மார் 11, 2024 01:13 AM

தாம்பரம்:வண்டலுார் பூங்காவில், அனுமன் குரங்கை தொடர்ந்து, காட்டுமாடு ஒன்று, கூண்டில் இருந்து தப்பியது. விலங்கு பராமரிப்பில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில், சமீபத்தில், இரண்டு அனுமன் குரங்குகள் கூண்டில் இருந்து தப்பி, காட்டுப்பகுதிக்கு சென்றன. பல நாட்கள் தேடுதலுக்கு பின், இரண்டு குரங்குகளும் பிடிப்பட்டன.
இந்த நிலையில் நேற்று, காட்டுமாடு ஒன்று, கூண்டில் இருந்து தப்பியுள்ளது. காட்டு மாடுகள் பராமரிக்கும் கூண்டில், கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
'காட்டுமாடு சபாரி'
அங்கு, அனுபவம் இல்லாத ஊழியர் பணியமர்த்தப்பட்டதாகவும், கேட்டை திறக்கும்போது ஒரு காட்டுமாடு தப்பி, காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தப்பிய காட்டுமாடை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இப்பூங்கா, காட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தில் சிறந்து விளங்குகிறது. தற்போது, 30க்கும் அதிகமானவை உள்ளன.
தொடர்ந்து, எண்ணிக்கை அதிகரிப்பதால், பார்வையாளர்களின் வசதிக்காக தனியாக 'காட்டுமாடு சபாரி' ஒன்றை துவக்க, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வண்டலுார் பூங்காவில் விலங்குகள் தப்பிப்பதும், ஊழியர்கள் காயமடைவதும் சமீபகாலமாக அதிகமாக நடந்து வருகிறது.
இதற்கு, அதிகாரிகளின் செயலற்ற நிர்வாகமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
இது தொடர்பாக, விளக்கம் கேட்க, பூங்கா உதவி இயக்குனரின் மொபைல் போனுக்கு, இரண்டு முறை தொடர்பு கொண்டும், அவர் அழைப்பை எடுக்கவில்லை.
@Image@
விரல்கள் துண்டாகின
l வண்டலுார் அடுத்த கீரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 64. வண்டலுார் உயிரியல் பூங்காவில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பாம்புகளை கையாளுவதில் அனுபவம் வாய்ந்த இவரை, ஓய்வுக்குப்பின், தினக்கூலி அடிப்படையில் பூங்கா நிர்வாகம் அதே வேலையை அவருக்கு வழங்கி வந்தது.
நேற்று மதியம், பாம்பு கூண்டு அருகேயுள்ள மரத்தை வெட்டுமாறு, அதிகாரிகள் கூறியதை அடுத்து, இயந்திரம் வாயிலாக மரங்களை வெட்டும் பணியில் அவர் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, இயந்திரம் வெட்டியதில் அவரது இடது கையில் கட்டை விரல், மோதிர விரல் துண்டாகின.
சக ஊழியர்கள் அவரை மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடரும் சம்பவங்கள்
பாம்புகளை கையாளுவதில் அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற ஊழியரை, சம்பந்தமே இல்லாத பணியில் ஈடுபடுத்தியதே விபத்திற்கு காரணம். பூங்காவில் ஊழியர்கள் காயமடைவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன், விலங்கு பராமரிப்பில் சம்பந்தமில்லாத குமார் என்பவரை, நீர் யானை கூண்டில் பணியமர்த்தினர். அவர், உணவு அளிக்கும்போது, நீர்யானை கடித்து குதறியது. தீவிர சிகிச்சை பின் குணமடைந்தார்.
சமீபத்தில், அனுமன் குரங்குகள் தப்பித்த சம்பவத்திலும், அனுபவம் இல்லாத ஊழியரை, உணவு வழங்கும் பணியில் ஈடுபடுத்தியே காரணமாகும்.
சம்பந்தமே இல்லாத ஊழியர்களை, விலங்கு பராமரிப்பில் ஈடுபடுத்தும், அதிகாரிகளின் அலட்சியத்தாலே தொடர் விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கு காரணமான பூங்கா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
-- வண்டலுார் பூங்கா பணியாளர்கள் நலச்சங்கம்
@Image
subboxhd@என்ன சிக்கல்?
வண்டலுார் உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு, சரியான நேரத்தில் உணவுகள் தரப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. காலை 11:30 மணிக்கு தரவேண்டிய உணவை, மதியம் 1:30 மணிக்கு மேலே தான், பூங்கா நிர்வாகம் தருகிறது. தாமதமாக உணவு வழங்கப்படுவதால், விலங்குகளின் குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படுவதாக, அங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தவிர, போதிய மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் இல்லாததும், சிக்கலை ஏற்படுத்துகிறது. வண்டலுார் உயிரியல் பூங்கா இயக்குனராக இருந்த சீனிவாச ரெட்டிக்கு, ஓராண்டுக்கு முன் பதவி உயர்வு வழங்கப்பட்டது.முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளராக பதவி வழங்கப்பட்டது. இதன் அலுவலம் வேளச்சேரியில் இருந்தாலும், வண்டலுார் பூங்கா இயக்குனராக, கூடுதல் பொறுப்பையும் நிர்வகித்து வருகிறார்.அதனால், பூங்கா நிர்வாக பணிகளில் அவரால் கவனம் செலுத்த முடிவதில்லை எனவும், பூங்கா பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

