/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏழு மலையின் பெருமைகளை காட்டிய அனிதா குஹா குழுவினர்
/
ஏழு மலையின் பெருமைகளை காட்டிய அனிதா குஹா குழுவினர்
ஏழு மலையின் பெருமைகளை காட்டிய அனிதா குஹா குழுவினர்
ஏழு மலையின் பெருமைகளை காட்டிய அனிதா குஹா குழுவினர்
ADDED : ஜன 15, 2024 02:11 AM

ஹரிதிரு மருகனே, விக்னங்களை போக்குபவனே, தேவர்கள் கணபதியே, கற்றவருக்கு துணை புரிவாயே என, விநாயகனை துதிக்கும் விநாயகர் கவுத்துவத்தோடு அனிதா குஹா குழுவினர், சாந்தோம் ஸ்ரீ கணபதி அரங்கில், தங்கள் நாட்டிய நிகழ்ச்சியை துவங்கினர்.
ரீதிகவுளை ராகத்தில் ஜதீஸ்வரம் அமைய, இரு குழந்தைகளும் எதிர் எதிர் பக்கங்களாக மாறி மாறி, கண்டசாபு தாளத்தை அழகுற அடவுகளால் செய்தனர்.
தொடர்ந்து, அனுமத் ஜெயந்தி நாளை போற்றும் வகயைில் ராமாயண கதையின் ஒரு சில காட்சிகளை விளக்க ஆரம்பித்தனர்.
சீதையை காண செல்லும் ஹனுமனிடம், மகேந்திர மருவத மலை இங்கேயே தங்கிச்செல்லும்படி கோரிக்கை வைக்கிறது. அவர் மறுக்கவே, மலையை சொட்டுச் செல்லும்படி கோருகிறது. அதன்படியே ஹனுமன் செய்யும் நிகழ்வை, நடன அசைவுகளில் தெளிவுபடுத்தினர்.
அதேபோல், சமுத்திரத்தில் வாழும் அரக்கியின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறிய ரூபம் எடுத்த ஹனுமன், அவரது வாயினுள் புகுந்து வெளியேறும் காட்சியையும், ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நாட்டிய குழுவினர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து, மதுர கீதம் பாடல். ஏழு மலையின் பெருமைகளை கூறும் இப்பாடலில் ஏழாவது மலையான திருமலை திருப்பதியின் சிறப்பு மற்றும் கொண்டாட்டத்தை, நடனத்தின் வாயிலாக குழுவினர் எளிமையாக எடுத்துரைத்தனர்.
இதில் குறிப்பிட்ட ஓரிடத்தில், பக்தர்கள் ஆடி, பாடி மகிழ, அவர்களுக்கு நடுவே சமேதராக வெங்கடேச பெருமாள் நடந்துவரும் நிகழ்வை காண கிடைத்தது, திருப்பதிக்கே சென்று வெங்கடாஜலபதியை காண்பதுபோல் அமைந்தது.
ரசிகர்களுக்கு பக்தியில் திழைக்க வைத்த அனிதா குஹாக்கு, 'கதே கலா ஆச்சார்யா' பட்டம், அபிநயங்களால் அனைவரையும் கவர்ந்த ரேஷ்மாவுக்கு 'ககத கலாவர்தினி' பட்டம், வளரும் இளம் கலைஞரான வர்ஷாவிற்கு 'யுவ கலாவர்தினி' பட்டம் வழங்கப்பட்டது.
-மா.அன்புக்கரசி,
மாணவி,
தமிழ்நாடு கவின் கலை மற்றும் இசை பல்கலை.