/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா சைக்கிள் பந்தயம் 60 சிறுவர் - சிறுமியருக்கு பரிசு
/
அண்ணா சைக்கிள் பந்தயம் 60 சிறுவர் - சிறுமியருக்கு பரிசு
அண்ணா சைக்கிள் பந்தயம் 60 சிறுவர் - சிறுமியருக்கு பரிசு
அண்ணா சைக்கிள் பந்தயம் 60 சிறுவர் - சிறுமியருக்கு பரிசு
ADDED : பிப் 02, 2025 12:37 AM

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெயரில் ஆண்டுதோறும் சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி, நேற்று காலை, சுவாமி சிவானந்தா சாலையில் நடந்தது.
போட்டியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில், 13, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட இரு பாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன.
காலை 6:30 மணிக்கு, சிவானந்தா சாலையில் துவங்கிய போட்டி, துார்தர்ஷன் தொலைகாட்சி நிலையம், நேப்பியர் பாலம், தீவுத்திடல் வழியாக, காயிதே மில்லத் பாலத்தில் இடதுபுறமாக திரும்பி, அண்ணா சாலை வழியாக சென்று, மீண்டும் சிவானந்தா சாலையில் நிறைவடைந்தது. போட்டியில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
அனைத்து போட்டிகள் முடிவில், மூன்று பிரிவுகளிலும், மொத்தம் 60 பேர் வெற்றி பெற்று, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் பெற்றனர். நிகழ்வில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட அலுவலர் ஆண்டனி, வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.