தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/அண்ணா நகர் எம்.எல்.ஏ., வீடு முற்றுகை

அண்ணா நகர் எம்.எல்.ஏ., வீடு முற்றுகை

அண்ணா நகர் எம்.எல்.ஏ., வீடு முற்றுகை


ADDED : மார் 06, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 12:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்ணா நகர், அமைந்தகரை, பி.பி., கார்டன் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவதாக தகவல் வெளியானதையடுத்து, அப்பகுதிவாசிகள், அண்ணா நகர் எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

மதுரவாயல் - - துறைமுகம் மேம்பாலப் பணிகளுக்காக அமைந்தகரை அருகில் எம்.எம்., காலனி மற்றும் பி.பி., தோட்டம் பகுதிகளில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக, நேற்று மாலை தகவல் வெளியானது.

இதையடுத்து, அப்பகுதிவாசிகள், அண்ணா நகர் 5வது பிரதான சாலை வசிக்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன் வீட்டை நேற்று இரவு முற்றுகையிட முயன்றனர். எம்.எல்.ஏ., வீட்டில் இல்லாததால், அவர்கள் திரும்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us