/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பல்கலை தடகளம் சாய்ராம் கல்லுாரி சாம்பியன்
/
அண்ணா பல்கலை தடகளம் சாய்ராம் கல்லுாரி சாம்பியன்
ADDED : நவ 08, 2025 03:09 AM

சென்னை: அண்ணா பல்கலையின் நான்காவது மண்டல தடகளப் போட்டியில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி, ஒட்டுமொத்தமாக முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை பல்வேறு மண்டலங்களாக பிரித்து, விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, நான்காவது மண்டலத்திற்கான தடகளப் போட்டி, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது.
போட்டியில், மண்டலத்திற்கு உட்பட்ட 20 கல்லுாரிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
அனைத்து போட்டிகள் முடிவில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி, ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி, ஏழு வெண்கல பதக்கங்கள் வென்று அசத்தியது. மேலும், ஒட்டுமொத்தமாக, 113 புள்ளி கள் பெற்று, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
அடுத்து, கிண்டி வளாக எம்.ஐ.டி., அணி, 72 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும், தாகூர் பொறியியல் கல்லுாரி, 31.5 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.

