/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பல்கலை பேட்மின்டன் ஆர்.எம்.கே., கல்லுாரி 'சாம்பியன்'
/
அண்ணா பல்கலை பேட்மின்டன் ஆர்.எம்.கே., கல்லுாரி 'சாம்பியன்'
அண்ணா பல்கலை பேட்மின்டன் ஆர்.எம்.கே., கல்லுாரி 'சாம்பியன்'
அண்ணா பல்கலை பேட்மின்டன் ஆர்.எம்.கே., கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : செப் 25, 2024 12:35 AM

சென்னை, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை, பல்வேறு மண்டலங்களாக பிரித்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், முதலாவது மண்டலத்திற்கான பேட்மின்டன் போட்டி, சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடத்தப்பட்டது; 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், பேட்மின்டன் போட்டியில், தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில், கவரைப்பேட்டை ஆர்.எம்.கே., பொறியியல் அணி, வேலம்மாள் பொறியியல் கல்லுாரி அணிகள் மோதின.
அதில், தனிநபரில் 21- - -18 , 21 - 17 என்ற கணக்கிலும், இரட்டையரில், 21-- - 16, 21 - 15 என்ற கணக்கிலும் ஆர்.எம்.கே., பொறியியல் அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில், ஆர்.எம்.கே., பொறியியல் அணி மற்றும் வேல் மல்டி டெக் கல்லுாரி மோதின.
அதில், முதல் தனிநபரில், 18 - 21 , 17 - 21 என்ற கணக்கிலும், இரண்டாவது தனிநபரில் 21 - -3 , 21 - -6 என்ற கணக்கிலும், இரட்டையரில், 21-- - 11, 21 - 12 என்ற கணக்கிலும் ஆர்.எம்.கே., பொறியியல் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.