ADDED : ஜூன் 05, 2026 04:26 AM
தாம்பரம்: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பா.ஜ.,வில் இருந்து விலகியுள்ளார்.
தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்தவர் வேதசுப்பிரமணியம். 1998ல், பா.ஜ.,வில் இணைந்த இவர், 28 ஆண்டுகளாக, அக்கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றினார். பின், தாம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர் பா.ஜ.,வில் இருந்து விலகியுள்ளார். அதற்கான கடிதத்தை மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பியுள்ளார்.
அண்ணாமலைக்கு பா.ஜ., மேலிடம் முறையான மரியாதை வழங்கவில்லை. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை ஏற்கவில்லை என்பதால், பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக, வேதசுப்பிர மணியம் தெரிவித்துள்ளார்.
