/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை கம்பன் கழகம் சார்பில் இலக்கிய போட்டிகள் அறிவிப்பு
/
சென்னை கம்பன் கழகம் சார்பில் இலக்கிய போட்டிகள் அறிவிப்பு
சென்னை கம்பன் கழகம் சார்பில் இலக்கிய போட்டிகள் அறிவிப்பு
சென்னை கம்பன் கழகம் சார்பில் இலக்கிய போட்டிகள் அறிவிப்பு
ADDED : ஜூன் 05, 2025 11:41 PM
சென்னை சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவை முன்னிட்டு, கல்லுாரி மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, கம்பன் கழக செயலர் சாரதா நம்பி ஆரூரன், கல்லுாரி முதல்வர்கள், தமிழ் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பு:
சென்னையில், 50 ஆண்டுகளாக கம்பனுக்கு விழா எடுப்பதுடன் மொழி, இலக்கிய உணர்வுகளை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வரும், 13, 14, 15ம் தேதிகளில், திருக்குறள், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், கம்ப ராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி ஆகியவை சார்ந்த பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளன.
அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், கல்லுாரியின் பொறுப்பாளர்களிடம் சான்றிதழ் பெற்று, பங்கேற்க வேண்டும்.
அதேபோல், கல்லுாரி முதல்வர், துணைத்தலைவரின் சான்று பெற்ற கட்டுரைகளை, வரும் 15ம் தேதிக்குள், 'பாலசீனிவாசன், துணை செயலர், 16, வேங்கடகிருஷ்ணா நகர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் - 602 024' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், 14ம் தேதி மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை, 'மூலங்களே மூலதனம், திசைகளைத் திற இசைபடப் பற' எனும் தலைப்பில் கவிதைப் போட்டி நடக்க உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 90423 81129, 93805 81129, 96006 44446 என்ற மொபைல் போன் எண்களிலோ, 'kambanchennai competitions@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.