/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின் ரயில்கள் அறிவிப்பு
/
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின் ரயில்கள் அறிவிப்பு
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின் ரயில்கள் அறிவிப்பு
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின் ரயில்கள் அறிவிப்பு
ADDED : அக் 15, 2025 02:09 AM
சென்னை, தீபாவளி பண்டிகை பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் காட்டாங்கொளத்துாருக்கு, சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
தாம்பரத்தில் இருந்து, வரும் 17ம் தேதி இரவு 7:45, 7:53, 8:10 மணிக்கு, கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்புவோருக்கு வசதியாக, காட்டாங்கொளத்துாரில் இருந்து தாம்பரத்துக்கு, வரும் 22ம் தேதி, ஆறு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தாம்பரத்தில் இருந்து காட்டாங்கொளத்துாருக்கு, வரும் 22ம் தேதி காலை 5:40 மணிக்கும், காட்டாங்கொளத்துாரில் இருந்து தாம்பரத்துக்கு, அதிகாலை 4:00, 4:30, 5:00, 5:35, காலை 6:25 மணிக்கு, சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள், அனைத்து புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.