/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி என்.ஆர்.ஐ., கணக்கில் இருந்து ரூ.8 கோடி மோசடி மேலும் ஒருவர் கைது

ADDED : நவ 01, 2025 02:06 AM
சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி கணக்கில் இருந்து, 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில், மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன், 54. இவரது உறவினர்களான தீனதயாளன், தினகர் பாண்டியன், 58, அவரது மனைவி சித்ரா ஆகியோர், அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு, அண்ணா நகரில் உள்ள வங்கியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான, என்.ஆர்.ஐ., கணக்குகள் உள்ளன.
கடந்த, 2015 ஜூன் 6 முதல் 2020 செப்., 6 வரையிலான காலத்தில், போலி காசோலைகள் வாயிலாக கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டது தெரியவந்தது.
தீனதயாளன் தினகர் பாண்டியன் அளித்த பொது அதிகாரத்தை பயன்படுத்தி, அர்ஜுன் பாண்டியன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, மோசடியில் ஈடுபட்ட வங்கி துணை மேலாளர் வேணுகோபால், 50, உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த, அயனாவரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரின் மனைவி சிவகாமியை, 50, போலீசார் நேற்று கைது செய்தனர். நாகேஸ்வரன் ஏற்கனவே கைதானவர்.