/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை வழக்கு மேலும் ஒருவர் கைது
/
போதை மாத்திரை வழக்கு மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 27, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், போதை மாத்திரை வழக்கில் ஐவர் கைதான நிலையில், மேலும் ஒருவர் சிக்கினார்.
அயனாவரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற வழக்கில், அயனாவரத்தைச் சேர்ந்த நவீன், முகேஸ்வரன், ரோமன், தனுஷ்குமார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், சமீபத்தில் கைதாகினர். இவர்களிடமிருந்து, 67 போதை மாத்திரைகள், 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெரம்பூர், சீனிவாசன் தெருவைச் சேர்ந்த மதன், 20, என்பவரை, அயனாவரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்கள் எங்கிருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கினர் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.