/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : மார் 26, 2025 11:52 PM
மடிப்பாக்கம், மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார், மூவரசம்பேட்டை, ஏரிக்கரை சாலை அருகே, 2024 டிச., 20ல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த திரிசூலம், அம்மன் நகரைச் சேர்ந்த சதாம் உசேன், 32, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவரிடம் இருந்த 5 கிராம் மெத் ஆம்பெட்டமைன், ஒரு எடை மிஷின், ஒரு ஐபோன் ஆகியவற்றை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.
மேலும், 2025, ஜன., 9ல் பிரசாந்த், மார்ச் 10ல் ஜான், மார்ச் 13ல் தமீம் பயாஸ் ஆகியோர், இவ்வழக்கில் தொடர்புடையதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர் விசாரணையில், ராயபுரம், புதுமனைகுப்பம், மசூதி ஒன்றாவது தெருவை சேர்ந்த அகமது, 29, என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.