/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.45 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்
/
ரூ.45 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்
ரூ.45 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்
ரூ.45 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : அக் 14, 2025 01:06 AM
கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருபவர் சாந்தகுமார். இவர் பல்வேறு கடைகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். அதற்கான பணத்தை, நாராயணன் என்பவர் வியாபாரிகளிடம் வசூல் செய்து, சாந்தகுமாரிடம் கொடுக்கும் பணி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் நாராயணன் கொத்தவால்சாவடியில் இருந்து 45 லட்சம் ரூபாய் வசூலித்து, பைக்கில் கோயம்பேடு நோக்கி சென்றார்.
கோயம்பேடு அருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாள்முனையில் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், தலைமறைவான விஜயராஜ், 32, என்பவர், கோவையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
இவர், வழிப்பறி செய்த பணத்தில் தன் பங்கை எடுத்துச் சென்று, நட்சத்திர ஹோட்டல்களில் மது அருந்தி, அழகிகளுடன் உல்லாசமாக இருந்து செலவு செய்தது தெரியவந்தது.