/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார பைக்கால் தீ மேலும் ஒருவர் இறப்பு
/
மின்சார பைக்கால் தீ மேலும் ஒருவர் இறப்பு
ADDED : மார் 22, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மதுரவாயல் பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் கவுதம், 31; தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த, 15ம் தேதி, வீட்டு போர்டிகோவில் நிறுத்தி, 'சார்ஜ்' போட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றி எரிந்தது.
அதில் சிக்காமல் இருக்க, கவுதம், அவரது மனைவி மஞ்சு, 9 மாத கைக்குழந்தை எழிலரசி ஆகியோர், வெளியேற முயன்றனர். இதில் மூவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, சிகிச்சையில் இருந்த, 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி, மறுநாள் இறந்தது. இந்நிலையில், நேற்று காலை, சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்தார்.