/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் தேக்கம் மண்டல வாரியாக மற்றொரு ஆய்வு
/
மழைநீர் தேக்கம் மண்டல வாரியாக மற்றொரு ஆய்வு
ADDED : ஜன 06, 2024 12:18 AM
சென்னை, சென்னையில் மழைநீர் தேங்கியதற்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில்,'மிக்ஜாம்' புயல், மழையின் போது, பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, 2015ம் ஆண்டில் பெய்த மழையின் போது கூட தண்ணீர் தேங்காத பகுதிகள், கடந்தாண்டு பெய்த மழையால் மூழ்கின.
மழைநீர் வடிகால்களுக்காக, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேக்கத்திற்கு முக்கிய காரணத்தை அறிய, மண்டல வாரியான அறிக்கையை, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கேட் டுள்ளார்.
இதில், கடந்த 2023 டிசம்பரில் பெய்த மழையால், எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்கியது, தேக்கத்திற்கான முக்கிய காரணம் குறித்து ஆராயப்படும்.
எத்தனை நாட்கள் மழைநீர் வடியாமல் இருந்தது, அதற்கான காரணம், மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு என்ன, மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருந்ததா, அவ்வாறு இருந்தும் வடியாமல் தேங்கிய காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளிக்கும்படி கோரப்பட்டுள்ளது.