/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடி மண்டல ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை
/
பெருங்குடி மண்டல ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை
ADDED : அக் 16, 2025 12:37 AM
புழுதிவாக்கம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் பரிசுப் பொருட்கள் பரிமாற்றங்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் விதமாக, புழுதிவாக்கத்தில் உள்ள பெருங்குடி மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், அதிகாரிகள், ஊழியர்கள், டிரைவர்கள் ஆகியோரையும் பரிசோதனை செய்தனர். அதில், பணியில் இருந்த நான்கு ஊழியர்களிடம் இருந்து, கணக்கில் வராத 54,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து, ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு விசாரணை செய்தனர். இது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.