/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் மனைகளில் மழைநீர் சாலையில் வெளியேற்ற எதிர்ப்பு
/
தனியார் மனைகளில் மழைநீர் சாலையில் வெளியேற்ற எதிர்ப்பு
தனியார் மனைகளில் மழைநீர் சாலையில் வெளியேற்ற எதிர்ப்பு
தனியார் மனைகளில் மழைநீர் சாலையில் வெளியேற்ற எதிர்ப்பு
ADDED : அக் 18, 2024 12:22 AM

அய்யப்பன்தாங்கல், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில், வீட்டுமனைகள் விற்பனைக்காக உள்ளன.
சமீபத்தில் பெய்த கனமழையில், இந்த வீட்டுமனை பிரிவுகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
தேங்கிய நீரை வெளியேற்ற வழி இல்லாததால், தனியார் நிறுவனம் தனலட்சுமி நகர் சாலையை தோண்டி, இரவோடு இரவாக குழாய் புதைத்து, மின் மோட்டார்கள் வாயிலாக வீட்டு மனைகளில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றியது.
இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சிக்கு புகார் அளித்தனர். ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு வந்து, புதைக்கப்பட்ட குழாய்களை பொக்லைன் இயந்திரத்தால் அகற்றி, உடைக்கப்பட்ட சாலை பகுதியை மண் கொட்டி மூடினர்.
மேலும், உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து மழைநீரை வெளியேற்றிய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.