/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முழங்கால் மறு சீரமைப்பு சிகிச்சை பெற்ற சிறுவன் சாதனை: அப்பல்லோ பெருமிதம்
/
முழங்கால் மறு சீரமைப்பு சிகிச்சை பெற்ற சிறுவன் சாதனை: அப்பல்லோ பெருமிதம்
முழங்கால் மறு சீரமைப்பு சிகிச்சை பெற்ற சிறுவன் சாதனை: அப்பல்லோ பெருமிதம்
முழங்கால் மறு சீரமைப்பு சிகிச்சை பெற்ற சிறுவன் சாதனை: அப்பல்லோ பெருமிதம்
ADDED : ஏப் 15, 2025 12:24 AM
சென்னை, 'அப்பல்லோவில், முழங்கால் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவன், ஒடிசா மாநிலம், பூரி நகரில் நடந்த சைக்கிளிங் போட்டியில் சாதனை படைத்துள்ளார்' என, அப்பல்லோ டாக்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்தில் முழங்காலில் கடும் காயம் ஏற்பட்ட, 16 வயதான சைக்கிள் பந்தய வீரர், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், முழங்கால் தொப்பி பகுதியில், கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
காயமடைந்த சிறுவன், சைக்கிள் பந்தயத்தில் நம்பிக்கை அளிக்கும் வீரராக ஜொலிப்பவர். இதனால், அவர் நடக்க இயலுமா, சைக்கிள் ஓட்ட முடியுமா என, அவரது குடும்பத்தினர் வேதனையில் இருந்தனர். பின், அவசர அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
எலும்பியல் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த, டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் தலைமையிலான டாக்டர்கள் குழு, சிறுவனுக்கு அவசர சிகிச்சை மேற்கொண்டது.
சிக்கலான முழங்கால் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதால், ஒடிசாவின் பூரி நகரில் நடந்த சைக்கிளிங் போட்டியில், சிறுவன் மீண்டெழுந்து சாதனைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து, டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் கூறுகையில், ''மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அனுபவத்தால், சரியான நேரத்தில் நோய்களையும், பாதிப்புகளையும் கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சையை அளிப்பதில், அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து புதிய வரையறைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது,'' என்றார்.
அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் மதுமிதா கூறுகையில், ''தீவிர காயத்தோடு வந்த சிறுவன், தற்போது ஆச்சரியப்படும் அளவிற்கு குணம் அடைந்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனைகள், நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவுகிறது,'' என்றார்.
★★