/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலராக விண்ணப்பம்
/
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலராக விண்ணப்பம்
ADDED : ஜூலை 01, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, நியமன கவுன்சிலர்களாக தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை மாநகராட்சி நியமன உறுப்பினர்களாக, ஒரு ஆண், ஒரு பெண் என, இரு மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் உள்ள தகுதி உடையோர் விண்ணப்ப படிவங்களை, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படிவங்களை பூர்த்தி செய்து, மாநகராட்சி கமிஷனரிடம் நேரடியாகவோ, தபால் வாயிலாகவோ 17ம் தேதி மாலை, 3:00மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.