/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணித திறமை தேர்வுக்கு டிச., 20க்குள் பதியலாம்
/
கணித திறமை தேர்வுக்கு டிச., 20க்குள் பதியலாம்
ADDED : நவ 22, 2024 12:18 AM
சென்னை:தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், 5 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கான கணித திறமை தேர்வு, வரும் ஜன., 5ம் தேதிநடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, டிச., 20க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், ஆண்டு தோறும் மாணவ, மாணவியரின் கணித திறமையை வெளிப்படுத்தும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான கணித திறமை தேர்வு, வரும் ஜன., 5 காலை 11:00 மணிக்கு நடத்தப்படுகிறது. இதில், 5 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இந்த தேர்வு, 90 நிமிடங்கள் நடத்தப்படுகின்றன.
இதில், பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், டிச., 20க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக ஒருவருக்கு, 5,000 ரூபாய்; இரண்டாம் பரிசாக இருவருக்கு தலா, 2,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக மூவருக்கு தலா, 1,000 ரூபாய்; நான்காம் பரிசாக, 20 பேருக்கு தலா, 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, 044- - 2441 0025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மையத்தின் செயல் இயக்குனர் லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.