/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவ ஆலோசகர்கள் ஜி.ஹெச்.,சில் நியமனம்
/
மருத்துவ ஆலோசகர்கள் ஜி.ஹெச்.,சில் நியமனம்
ADDED : டிச 05, 2024 12:14 AM
சென்னை,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விபரங்களை உடனாளர்கள் அவ்வப்போது அறிந்து கொள்வதற்கு, பிரத்யேக மருத்துவ ஆலோசகர்களை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நியமித்துள்ளது.
சமீபத்தில், கிண்டி மருத்துவமனையில் வாலிபர் ஒருவர், மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், 'தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காததும், கண்ணியமாக நடத்தாததுமே தாக்குதலுக்கு காரணம்' என, அந்த வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
இந்த சூழ்நிலையில், தற்போது இத்தகைய முன்முயற்சியை மாநிலத்திலேயே முதன்முறையாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.
மருத்துவமனை முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறுகையில், ''ஒவ்வொரு நோயாளியையும், அவர்களது உடனாளர்களையும் கண்ணியத்துடன் நடத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே நோக்கம். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேரை அப்பணிகளில் நியமித்துள்ளோம்,'' என்றார்.