
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணி நியமன ஆணை
சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில் நடந்த 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் 91.87 சதவீத மாணவ - மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டிற்கு 41.20 லட்சம் ஊதியத்தில், மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். பல்கலை வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள்செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர், பணி நியமன ஆணை வழங்கினர். இடம்: பல்கலை வளாகம், ஓ.எம்.ஆர்., சாலை, சென்னை.