/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீ இங்கு நலமே... நான் அங்கு நலமா...? கண்காட்சியில் பேசும் புகைப்படங்கள்
/
நீ இங்கு நலமே... நான் அங்கு நலமா...? கண்காட்சியில் பேசும் புகைப்படங்கள்
நீ இங்கு நலமே... நான் அங்கு நலமா...? கண்காட்சியில் பேசும் புகைப்படங்கள்
நீ இங்கு நலமே... நான் அங்கு நலமா...? கண்காட்சியில் பேசும் புகைப்படங்கள்
ADDED : ஜூன் 02, 2025 03:04 AM

மருத்துவமனை ஒன்றில், கணவனும், மணைவியும் அவசர சிகிச்சைக்காக, ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்வதற்காக, 'பெட்'டில் இருக்கின்றனர். அந்த நிலையிலும், தன் மனைவியின் கையை பிடித்து கணவன் ஆறுதல் சொல்கிறார்.
மனதைத் தொடும் இது போன்ற பல படங்கள், சென்னையில் நடந்துவரும் புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
சென்னையில், 'போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ்' என்ற பி.எஸ்.எம்., அமைப்பின் சார்பில், சர்வதேச புகைப்படக் கண்காட்சி, கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்து வருகிறது.
கண்காட்சியை திரைப்பட ஒளிப்பதிவாளர் சேதுமாதவன் துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சியில் உலகம் முழுதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் எடுத்த சிறந்த படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பி.எஸ்.எம்., தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் நாராயணன், செயலர் லஷ்மி நராயணன், பொருளாளர் சிவலை செந்தில்நாதன், இயக்குனர் பாலு, அமைப்பாளர் அசோக் விஸ்வநாதன் ஆகியோர் செய்துள்ளனர்.
ஒப்பென் கலர், மோனோக்ரோம், லாண்ட்ஸ்கேப், சின்னங்கள் , வனவிலங்கு, ஸ்ட்ரீட் போட்டோகிராபி, போர்ட்ரெய்ட் ஆகிய தலைப்பில், 340 புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சி வரும் 7ம் தேதி வரை நடைபெறும். பார்வை நேரம் பகல் 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை; அனுமதி இலவசம்.
- நமது நிருபர் -