/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூரப்பட்டு டோல்கேட்டில் தகராறு 2 மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
/
சூரப்பட்டு டோல்கேட்டில் தகராறு 2 மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
சூரப்பட்டு டோல்கேட்டில் தகராறு 2 மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
சூரப்பட்டு டோல்கேட்டில் தகராறு 2 மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
ADDED : ஜன 25, 2024 12:53 AM
புழல், புழல் தாம்பரம் பை - பாஸ் சாலையில், சூரப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலை 'டோல்கேட்' உள்ளது. நேற்று காலை 10:00 மணி அளவில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தனியார் பேருந்து ஓட்டுனருக்கும், அங்கிருந்த ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில், தனியார் பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாக மற்ற வாகன ஓட்டிகள் 50க்கும் மேற்பட்டோர், டோல்கேட் நிர்வாக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு, இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி மற்றும் அம்பத்துார் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, போக்குவரத்தை சரிசெய்தனர்.
பின், தகராறில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனர் பாலகிருஷ்ணன், 26 மற்றும் மற்றும் டோல்கேட் ஊழியர் கொரட்டூரைச் சேர்ந்த டோல்கேட் ஊழியர் சவுத்ரி, 51 ஆகியோரை, அம்பத்துார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இரு தரப்பினரும் சமரசமாக செல்வதாக கூறியதை தொடர்ந்து, அனுப்பி வைத்தனர்.