ADDED : பிப் 15, 2025 08:57 PM
புதுவண்ணாரப்பேட்டை:சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, தனபால் நகரை சேர்ந்தவர் புனிதவதி, 64. இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் மோகன் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
மோகன், அவரது உறவினர் மூர்த்தி ஆகியோர் கடந்த சில மாதங்களாக புனிதவதியின் வீட்டின் முன்பு உட்கார்ந்து, தகாத வார்த்தைகள் பேசி, மது குடித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தட்டிக்கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புனிதவதி, வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளர் மோகன் குடும்பத்தாரின் வீட்டிற்கு சென்று திட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி காலை புனிதவதி - மோகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ள. மோகன் மற்றும் அவரது மனைவி சரசு, உறவினர் மூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து புனிதவதியை தாக்கியுள்ளனர்.
புதுவண்ணாரபேட்டை போலீசார், வழக்குப் பதிந்து மோகனை கைது செய்தனர். தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

