/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் வழிப்பறி செய்தவர் கைது
/
மொபைல் போன் வழிப்பறி செய்தவர் கைது
ADDED : பிப் 21, 2025 12:27 AM

ஏழுகிணறு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூவேந்திரன், 36; ஏழு கிணறு, பிடாரியார் கோவில் தெருவில் தங்கி, பை தைக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, மின்ட் 'டாஸ்மாக்' கடை அருகே, சாலையோரம் அமர்ந்திருந்தார். அங்கு வந்த மூன்று பேர், பூவேந்திரனை மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர்.
ஏழு கிணறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், மொபைல் போன் பறிப்பில் தொடர்புடைய, பழைய வண்ணாரப்பேட்டை முருகா, 24, என்பவரை நேற்று, கைது செய்தனர்.
அவரிடமிருந்து, மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, முருகா சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான இருவரை, போலீசார் தேடுகின்றனர்.

