/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்டிக் கடைக்கு தீ வைத்தவர் கைது
/
பெட்டிக் கடைக்கு தீ வைத்தவர் கைது
ADDED : ஏப் 15, 2025 12:27 AM
ஓட்டேரி,பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகா, 56. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்து விட்டார். மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், வீட்டுக்கு வெளியே பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஒருவர், முகமுடி அணிந்து வந்து, பெட்டிக்கடை முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றார். இதில் கடை முன் இருந்த மர மேஜை எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்தால், கடையில் பெரிய சேதம் ஏற்படவில்லை.
கனகாவின் வீட்டிற்கு அருகே வசிக்கும், குட்டிமணிக்கும் கனகாவுக்கும் நிலப்பிரச்னை இருந்துள்ளதால், அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என, ஓட்டேரி போலீசில் கனகா புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் குட்டிமணி, 40, என்பவர் கனகாவின் கடைக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.