/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடந்து சென்ற வாலிபரிடம் வம்பிழுத்து தாக்கியோர் கைது
/
நடந்து சென்ற வாலிபரிடம் வம்பிழுத்து தாக்கியோர் கைது
நடந்து சென்ற வாலிபரிடம் வம்பிழுத்து தாக்கியோர் கைது
நடந்து சென்ற வாலிபரிடம் வம்பிழுத்து தாக்கியோர் கைது
ADDED : மார் 19, 2025 12:12 AM
மாம்பலம், தி.நகர், முத்துரங்கன் சாலையைச் சேர்ந்தவர் யுகேஷ்குமார், 28. இவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை, தி.நகர் வேம்புலியம்மன் கோவில் வழியாக நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், யுகேஷ்குமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளில் பேசினர்.
இதில், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர்கள் கல்லால் யுகேஷ்குமாரை தாக்கிவிட்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த மாம்பலம் போலீசார், தகராறில் ஈடுபட்ட சைதாப்பேட்டை, விநாயகபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ், 21, மற்றும் ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்த ஷேக் கபீர், 21, ஆகியோரை கைது செய்தனர். இதில், ஷேக் கபீர் மீது குமரன் நகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளன.