ADDED : பிப் 16, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
பேசின்பாலம்: வியாசர்பாடி, எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 22. இவர், நண்பர் நரேஷ், 30, என்பவருடன், புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில், நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார்.
அப்போது, எதிரே மதுபோதையில் வந்த வாலிபர்கள், வீண் தகராறு செய்து அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த இரு வரும், தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பேசின்பாலம் போலீசார் விசாரித்து, புளியந்தோப்பைச் சேர்ந்த அருண் என்ற இமான், 20, கோகுல்ராஜ், 21, 17 மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவர் என, நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.
பின், சிறுவர்கள் இருவரும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
