/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூலித்தொழிலாளியிடம் பணம் பறித்தோர் கைது
/
கூலித்தொழிலாளியிடம் பணம் பறித்தோர் கைது
ADDED : ஜூலை 31, 2025 12:27 AM
திருவொற்றியூர்,கூலி தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் சேகர், 38; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, மாட்டுமந்தை மேம்பாலம் அருகே நடந்துச் சென்றார். அப்போது, அவரை வழிமறித்த இருவர், பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
சேகர், பணம் தர மறுக்கவே, மர்ம நபர்கள் அவரை கையால் தாக்கி, 800 ரூபாய் பறித்ததுடன், அருகேயிருந்த டீக்கடையில் கண்ணாடி டம்ளர்களை உடைத்து தப்பினர்.
இது குறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த ரிஷி கண்ணன், 28, சூரஜ் ஜினிஷ் கண்ணன், 31, ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், இருவர் காசிமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், இவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.