/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு டெலிவரி பெண் ஊழியரை கிண்டலடித்தோர் கைது
/
உணவு டெலிவரி பெண் ஊழியரை கிண்டலடித்தோர் கைது
ADDED : டிச 15, 2024 08:41 PM
கொளத்துார்:வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்த தம்பதி விக்னேஷ் கிருஷ்ணா, 38, மோனிஷா தேவி, 36. இருவரும், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும், 'சொமேட்டோ' நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கொளத்துார், சிவசக்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், மனு கிருஷ்ணா, 28, விஷ்ணு, 26, இருவரும் நேற்று மதிய உணவை சொமேட்டோவில் 'ஆர்டர்' செய்தனர். அதனை, டெலிவரி செய்ய மோனிஷா தேவி சென்றார்.
அப்போது, முகவரியை விசாரிக்க மனு கிருஷ்ணா மற்றும் விஷ்ணு, இருவரையும் தொடர்பு கொண்ட போது, 'உங்கள் குரல் ரொமான்டிக்காக உள்ளது' என, கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மோனிஷா தேவி, உணவு டெலிவரி செய்து விட்டு, அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர், முரளி மனோகரிடம் புகார் அளித்தார்.
அதன்படி, மனு கிருஷ்ணா மற்றும் விஷ்ணுவை, தொடர்பு கொண்டபோது, இருவரும், முரளி மனோகரை ஆபாசமாக திட்டியுள்ளனர். இது குறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த ராஜமங்கலம் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

