/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெங்களூரில் இருந்து கூலிப் வாங்கி வந்து விற்றவர் கைது
/
பெங்களூரில் இருந்து கூலிப் வாங்கி வந்து விற்றவர் கைது
பெங்களூரில் இருந்து கூலிப் வாங்கி வந்து விற்றவர் கைது
பெங்களூரில் இருந்து கூலிப் வாங்கி வந்து விற்றவர் கைது
ADDED : பிப் 04, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:சென்னை, வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்.நகர், 1வது தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த இரண்டு கிலோ கூலிப், ஹான்ஸ் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சிவராமன், 41 என்பவரிடம் நடத்திய விசாரணையில், இவர் பெங்களூரில் இருந்து கூலிப் வாங்கி வந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதி்மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.