/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைதான ஏர்போர்ட் மூர்த்திக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்
/
கைதான ஏர்போர்ட் மூர்த்திக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்
கைதான ஏர்போர்ட் மூர்த்திக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்
கைதான ஏர்போர்ட் மூர்த்திக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்
ADDED : செப் 08, 2025 11:39 PM
சென்னை, டி.ஜி.பி., அலுவலகம் அருகே, திலீபன் என்பவரை கத்தியால் கிழித்ததாக கைதான புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை, வரும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன், ஏர்போர்ட் மூர்த்தியும், வி.சி., கட்சியினரும் மோதிக்கொண்டனர். இதி ல், திலீபன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இவரை மூர்த்தி, கத்தியால் கிழித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, மூர்த்தி மீது, மெரினா காவல் நிலைய போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கைது செய்துள்ளனர்.
திடீரென நெஞ்சு வலிப்பதாக மூர்த்தி கூறியதால், போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சைக்கு பின் அவரை நேற்று மாலை, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தலைவர்கள் கண்டனம்: நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் கொடுக்க சென்ற ஏர்போர்ட் மூர்த்தியை, வாசலில் வைத்து, குண்டர்கள் தாக்கியுள்ளனர். தனியொரு ஆளாக நின்றவர் தன்னை தற்காத்து கொள்ள முயன்றார்.
ஆனால், பொய் வழக்கை புனைந்து, பாதிக்கப்பட்டவர் மீதே, வழக்கு தொடுத்து சிறைப்படுத்துவது, அதிகார அத்துமீறலின் உச்சம். இது, கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி., அலுவலக வாசலில் வைத்து, வி.சி., கட்சியினர் தாக்கினர். தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்து கொள்ள முயற்சித்த மூர்த்தியை, போலீசார் கைது செய்துள்ளனர்.
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 2006 - 2011 ஆட்சி காலத்தை விட, மோசமான ஆட்சியை, அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.