/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாசு வெடித்ததில் தகராறு பெண் தாலியை அறுத்தவர் கைது
/
பட்டாசு வெடித்ததில் தகராறு பெண் தாலியை அறுத்தவர் கைது
பட்டாசு வெடித்ததில் தகராறு பெண் தாலியை அறுத்தவர் கைது
பட்டாசு வெடித்ததில் தகராறு பெண் தாலியை அறுத்தவர் கைது
ADDED : நவ 04, 2024 04:21 AM
வியாசர்பாடி:வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், 16வது பிளாக்கை சேர்ந்தவர் கலைவாணி, 37; பூக்கடையில் உள்ள எண்ணெய் கடையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் வசிக்கும் முத்து என்பவர், தீபாவளியன்று பட்டாசு வெடித்துள்ளார். அப்போது கலைவாணி, சிறிது துாரம் தள்ளிச் சென்று பட்டாசு வெடிக்குமாறு கூற, முத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனார்.
அப்போது, இரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. அப்போது ஆத்திரமடைந்த முத்து, கலைவாணியின் தாலிக்கொடி அறுத்துள்ளார்.
இதில், தாலிக்கொடியில் இருந்த தங்க காசு உள்ளிட்டவை காணவில்லை எனவும், தன் கணவர் அணிந்திருந்த தங்க செயினை முத்து பறித்து வீசியதாகவும், கலைவாணி நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, 16வது பிளாக்கை சேர்ந்த முத்து, 36, என்பவரை கைது செய்தனர்.