/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி
/
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி
ADDED : டிச 31, 2024 12:41 AM
சென்னை, டதமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மின்னணு முறையில், சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சியை, வரும் 2ல் துவங்கி 4ம் தேதி வரை, சென்னை ஈக்காட்டுதாங்கல், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ., அலுவலக சாலையில் நடக்கிறது.
இதில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு முறையில் சந்தைப்படுத்துதல், எஸ்.இ.ஓ., முறை, விளம்பர பிரசார மேம்படுத்துதல் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. கூடுதல் விபரங்களை, 86681 02600, 70101 43022 என்ற எண்களிலும், www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.