/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரிகள் நிரம்பாததால் வெள்ள பாதிப்பு குறைவு
/
ஏரிகள் நிரம்பாததால் வெள்ள பாதிப்பு குறைவு
UPDATED : அக் 16, 2024 01:01 AM
ADDED : அக் 16, 2024 12:06 AM

சென்னை : குன்றத்துார் ஒன்றியத்தில் வரதராஜபுரம், திருமுடிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கொல்லச்சேரி, மலையம்பாக்கம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில், ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படும்.
மணிமங்கலம் ஏரி, சோமங்கலம் ஏரி, ஒரத்துார் நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே, புறநகர் பகுதிகளான வரதராஜபுரத்தில் அதிகளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும். ஏரிகள் முழு கொள்ளளவை எட்டாததால், நேற்று மாலை 3:00 மணி நிலவரப்படி வரதராஜபுரம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் வெள்ள பாதிப்பு இல்லை. தாழ்வான சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
பல்லாவரம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், மேடவாக்கம் பகுதி ஏரிகளில், உபரிநீர் வெளியேறும் போக்கு கால்வாய்கள் சமீபத்தில் துார்வாரப்பட்டது. தவிர, இந்த ஏரிகள் அனைத்திலும் 60 சதவீத நீர் மட்டுமே தேங்கியிருந்தது. இதனால், சுற்றுப்புற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை.