/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்பந்து, நீச்சலில் அசத்தி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., சாம்பியன்
/
கால்பந்து, நீச்சலில் அசத்தி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., சாம்பியன்
கால்பந்து, நீச்சலில் அசத்தி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., சாம்பியன்
கால்பந்து, நீச்சலில் அசத்தி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., சாம்பியன்
ADDED : அக் 27, 2024 12:16 AM

சென்னை, ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியின் உடற்கல்வியியல் துறை சார்பில், உடற்கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன. 19 அணிகள் மோதுகின்றன.
ஆடவருக்கான கால்பந்து இறுதி போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான இப்போட்டியின் முடிவில், 2 - 0 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
நீச்சல் போட்டியில், வண்டலுார் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையின் சுதேஷ்குமார், 200 மீ., நீந்தி முதலிடத்தையும், மற்றும் 100 மீ., பேக் ஸ்டோக், 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் ஆகிய மூன்று பிரிவுகளில் முதலிடங்களை பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அதேபோல், பெண்கள் பிரிவில், நாமக்கல் கிறிஸ்டியன் கல்லுாரியின் ஸ்டேபி கிரேஸ் என்ற மாணவி, 50 மீ., ப்ரீ ஸ்டைல், 100 மீ., பேக் ஸ்ட்ரோக், 100 மீ., ப்ரீ ஸ்டைல் ஆகிய மூன்று பிரிவுகளில் முதலிடங்களை பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்கள் பிரிவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி 60 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
அதேபோல் பெண்கள் பிரிவிலும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி 49 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மற்ற போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.