/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அஷ்டலட்சுமி கோவில் திருப்பணிகள் துவக்கம்
/
அஷ்டலட்சுமி கோவில் திருப்பணிகள் துவக்கம்
ADDED : பிப் 16, 2024 12:39 AM
சென்னை, பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 1.41 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி துவங்கியது. இதை முன்னிட்டு, பாலாலயம் நேற்று நடந்தது.
உபயதாரர்கள் நிதி வாயிலாக, 4.60 லட்சம் ரூபாயில் ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னிதிகளும், 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில் குருவாயூரப்பன் சன்னிதி மற்றும் மடப்பள்ளி பழுதுபார்த்து, வர்ணம் தீட்டும் பணிகள் நடக்கவுள்ளன.
கோவிலின் அனைத்து மரக்கதவுகளும், 33 லட்சம் ரூபாய் மதிப்பில் பழுதுபார்த்து புதுப்பித்தல்; 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் வடக்கு, தெற்கு பக்கங்களில் தரைதளம் அமைத்தல் என, மொத்தம் ஒன்பது பணிகள், 1.41 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.