/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., கவுன்சிலரின் பேரன் மீது அடிதடி வழக்கு
/
தி.மு.க., கவுன்சிலரின் பேரன் மீது அடிதடி வழக்கு
ADDED : அக் 29, 2025 01:59 AM
ராமாபுரம்: பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலரின் பேரன் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
ராமாபுரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மணி, 24. இவர், ராமாபுரம் 154வது வார்டு தி.மு.க., வட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார்.
இவர், ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் உள்ள தன் அலுவலகத்திற்கு, 26ம்தேதி இரவு காரை நிறுத்த சென்றார். அப்போது, பொது இடத்தில் காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம், 'ஏன் இங்கு மது அருந்துகிறீர்கள்' எனக் கேட்டுள்ளார்.
இதனால், காரில் மது போதையில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து, மணியை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த மணியை, அங்கிருந்தோர்கள் மீட்டு, கே.கே., நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், 137வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனசேகரனின் பேரன் சந்திரசேகர், 19, மற்றும் நண்பர்கள் சுதன், யஸ்வந்த், மதன் ஆகியோர் மணியை தாக்கியது தெரிய வந்தது. நான்கு பேர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

