/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி மெக்கானிக் கைது
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி மெக்கானிக் கைது
ADDED : நவ 09, 2024 12:24 AM
ராயபுரம், ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்த மையத்திற்கு வந்த மர்ம நபர், 'சிசிடிவி' கேமராவை திசை திருப்பி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கேமரா திசை திருப்பப்பட்டதால், மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி தலைமையகத்தில், உடனடியாக அலாரம் ஒலித்து உள்ளது. சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ராயபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மர்ம நபரை பிடித்து விசாரித்தனர்.
ராயபுரம் அர்த்துாண் சாலை, அய்யாப்பிள்ளைத் தோட்டத்தைச் சேர்ந்த ஜான்சன், 58; 'ஏசி' மெக்கானிக் என்பதும், குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் அவர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின், சிறையில் அடைத்தனர்.