/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலையில் கழிப்பறை கழிவு கொட்டி அட்டூழியம்
/
வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலையில் கழிப்பறை கழிவு கொட்டி அட்டூழியம்
வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலையில் கழிப்பறை கழிவு கொட்டி அட்டூழியம்
வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலையில் கழிப்பறை கழிவு கொட்டி அட்டூழியம்
ADDED : மே 29, 2025 12:33 AM

சென்னை, வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலை, 2 கி.மீ., நீளம்,, 80 அடி அகலம் கொண்டது. இந்த சாலை மற்றும் இதை ஒட்டியுள்ள பகுதிகள், ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ளன.
ரயில்வே நிர்வாகம் துாய்மை பணியை செய்யாததால், மாநகராட்சி பராமரித்து வருகிறது. அதே வேளையில், சட்டவிரோத செயல்களை ரயில்வே நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சாலையில் குப்பை, கட்டடம் மற்றும் மருத்துவ கழிவு கொட்டுவது, தொடர்ந்து நடக்கிறது. இதை, ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதனால், கழிவுகள் கொட்டும் இடமாக, இந்த சாலை மாறி வருகிறது. சில மாதங்களாக, பிளாஸ்டிக், சிமென்ட் கழிவுகள் கொட்டினர். இரு தினங்களாக, கழிப்பறை கழிவை லாரியில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
இதுகுறித்து, வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ரயில்வே சாலை பயன்பாட்டுக்கு வந்த பின், துரித பயணத்திற்கும், நடைபயிற்சி செய்யவும் பயன்படுத்துகிறோம்.
சதுப்பு நிலம் அருகில் இந்த சாலை உள்ளதால், பசுமை சோலையாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை தடுக்கும் விதமாக, சில அரசியல் கட்சியினர் சேர்ந்து, பிளாஸ்டிக், இறைச்சி கழிவை கொட்டி வந்த நிலையில், இப்போது கழிப்பறை கழிவை கொட்டுகின்றனர்.
இதற்கு, மக்கள் பிரதிநிதிகள் துணை போகக்கூடாது. அதிகாரிகளுடன் சேர்ந்து தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.