தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பா.ஜ., உட்கட்சி பூசல் நிர்வாகி மீது தாக்குதல்

பா.ஜ., உட்கட்சி பூசல் நிர்வாகி மீது தாக்குதல்

பா.ஜ., உட்கட்சி பூசல் நிர்வாகி மீது தாக்குதல்


ADDED : நவ 12, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலையூர், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேஷ், 28; பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலர்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், பெருங்களத்துார், கலைஞர் நெடுஞ்சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில், உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, அங்கு வந்த யஷ்வந்த், செந்தில், அரவிந்த் ஆகியோர், அவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, தலை மற்றும் தாடையில் மூன்று தையல் போடப்பட்டது.

பின், மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, பீர்க்கங்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், சுபாஷ் என்பவர் மாவட்ட தலைவர் பொறுப்புக்கு, தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கணேஷிடம் கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்னையில், மேற்கூறிய நபர்கள் தாக்கியிருக்கலாம் என தெரிந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us