ADDED : மே 06, 2025 12:48 AM
அ நிறம் | அளவு
செம்மஞ்சேரி,
சோழிங்கநல்லுார், அன்னை இந்திரா நகர் இரண்டாவது தெருவில், ஒரு ஆண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியை, சாய்குமார், 26, என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த விடுதியால், அக்கம் பக்கத்தில் உள்ள சிலருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, போதையில் சென்ற மூன்று பேர், சாய்குமாரை விடுதியில் இருந்து வெளியே இழுத்து வந்து, கையாலும், உருட்டு கட்டையாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதில், சாய்குமாருக்கு உதடு, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனர்.
