/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓமந்துாரார் ஜி.எச்.,சில் நோயாளி மீது தாக்குதல்
/
ஓமந்துாரார் ஜி.எச்.,சில் நோயாளி மீது தாக்குதல்
ADDED : டிச 16, 2024 04:04 AM
சென்னை:சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக், 27; மென்பொறியாளர். இவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், தன் மனைவியுடன் எழும்பூர் எல்.ஜி., சாலை வழியாக சென்றார்.
அப்போது, அவ்வழியே வந்த பெரவள்ளூரைச் சேர்ந்த தினேஷ், 30, என்பவரின் இரு சக்கர வாகனம், கார்த்திக் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த இருவரும், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கை பார்க்க வந்த அவரது உறவினர்கள், விபத்துக்குதினேஷ் தான் காரணம் என, சிகிச்சையில் இருந்த அவரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த தினேஷ், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தினேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

