/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., நிகழ்ச்சியில் போலீஸ் மீது தாக்குதல்
/
தி.மு.க., நிகழ்ச்சியில் போலீஸ் மீது தாக்குதல்
ADDED : ஏப் 15, 2025 12:41 AM
வேளச்சேரி,வேளச்சேரி, காந்தி சாலையில், தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு நடந்தது.
நெரிசல் ஏற்படாமல் இருக்க, வேளச்சேரி போலீஸ்காரர் காமராஜ், வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, ஓரமாக செல்ல காமராஜ் கூறினார். ஓரமாக செல்லாமல் அடம்பிடித்த அந்த நபர், போலீசிடம் வாக்குவாதம் செய்தார்.
இதை, காமராஜ் அவரது மொபைல் போனில் படம் பிடித்தார். உடனே, போதை நபருடன் வந்த மற்றொரு நபர், காமராஜை தள்ளிவிட்டு தாக்கினார்.
பின், நிகழ்ச்சியில் இருந்தவர்கள் சமாதானம் செய்து, அவர்களை அனுப்பி வைத்தனர். வேளச்சேரி போலீசார், போதை நபரையும், காமராஜை தாக்கிய அவரின் நண்பரையும் தேடி வருகின்றனர்.