ADDED : பிப் 27, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்,
புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதி பிரகாஷ், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி, மீண்டும் நேற்று சிறைக்கு திரும்பினார். அவரிடம் சக கைதிகள் கஞ்சா கேட்டு தகராறு செய்துள்ளனர்.
அவர், கஞ்சா எதுவும் கிடையாது எனக்கூறிய நிலையில், கைதிகள் சிலர், பிரகாஷை தாக்கியுள்ளனர். இதில் அவரது முகம், கை, காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவருக்கு, சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, ஹரி, விஜய், அஜித்குமார், ஹரிபிரகாஷ், செல்வன், தினேஷ் கார்த்திக், சுரேஷ், கார்த்திக் ஆகிய எட்டு கைதிகள் மீது, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.