/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை தாக்கி வழிப்பறி: 2 பேர் கைது
/
வாலிபரை தாக்கி வழிப்பறி: 2 பேர் கைது
ADDED : அக் 11, 2024 12:23 AM
கோடம்பாக்கம், அசோக் நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் தர்சன், 22. கடந்த 9ம் தேதி, கோடம்பாக்கம் அக்பரபாத் 2வது தெருவில் நின்றிருந்தார்.
அங்கு, தர்சனுக்கு அறிமுகமான கதிர் ஈஸ்வர், 24, என்பவர், தன் இரு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்தார்.
தர்சனை கண்டதும், அவரிடம் கதிர்ஈஸ்வர் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுக்கவே, அவரை மிரட்டி மொபைல் போன், பைக்கை பறித்தனர்.
பின், தர்சனை ஆட்டோவில் ஏற்றி, அருகில் உள்ள பழைய கட்டடத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு, தர்சனை தாக்கியதுடன், மொபைல் போன் மற்றும் பைக் வேண்டும் என்றால் 20,000 ரூபாய் தர வேண்டும் என மிரட்டி அனுப்பினர்.
இதுகுறித்து தர்சன், கோடம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தை சேர்ந்த கதிர்ஈஸ்வர், சரவணன், 22, ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, தர்சன் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடுகின்றனர்.