ADDED : பிப் 22, 2024 12:32 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்தவரின் 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளி முடிந்ததும், சைக்கிளில் வீட்டுக்கு செல்வார்.
நேற்றும் அதேபோல், பள்ளி முடிந்து சைக்கிளில் கண்ணம்மா நகர் நேரு தெருவில் சென்றபோது, வெள்ளை நிற காரில் வந்த ஆணும், பெண்ணும், மாணவி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதி, மாணவியை காரில் ஏற்றி கடத்த முயற்சித்தனர்.
அப்போது, அந்த தெருவில் போலீஸ்காரர் ஒருவர் வருவதை பார்த்த ஆணும், பெண்ணும், மாணவியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.
வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்த விபரங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில், மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவி கடத்தல் முயற்சி சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.