தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொலை முயற்சி: இருவர் கைது

கொலை முயற்சி: இருவர் கைது

கொலை முயற்சி: இருவர் கைது


ADDED : அக் 02, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மடிப்பாக்கம், கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 21. இவர், கீழ்க்கட்டளை கஸ்துாரிபாய் விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் அதிகாலை, இந்த விடுதிக்கு வந்த மர்ம நபர்கள் நால்வர், மணிவண்ணனை 'பைக்'கில் ஏற்றிச் சென்று, மறைவான இடத்தில் வைத்து, கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

உயிருக்கு போராடிய அவரை, அவ்வழியாக வந்தோர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

இதில், மணிவண்ணனுடன் பணிபுரிந்த குணால் என்பவருக்கும் இவருக்கும், சமீபத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் குணால், தன் நண்பர்களுடன் சேர்ந்து மணிவண்ணனை கொலை செய்ய முயற்சித்தது தெரிந்தது.

இதையடுத்து கீழ்ப்பாக்கம், மண்டபம் சாலையைச் சேர்ந்த குணால், 20, அண்ணா நகர் கிழக்கு குஜ்ஜி தெருவைச் சேர்ந்த ரித்திக், 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து இரு கத்தி, இரண்டு 'பைக்'குகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us